சாக்கிய பொங்கல் மனிதம் ஆக்கிய பொங்கல்
கோவணங்கள் கிழிந்து தொங்கும் ...பகல் நிர்வாணம்...
..இடுப்பில் நிற்காது விழும் ஆடை ..வயிற்றில் வறுமைக்கோடு !
..நாணம்கொலும் நாங்கள் நடந்தே வளர்த்த பூமி ..
எங்கள் குரல் கேட்டு தலையாட்டும் கார்நெல் விளைச்சல் ...
..வியர்வை வாசத்தில் விடைகாணும் தைமாசம் ...
...வழிபிறக்கும் தை பிறந்தால் ...அவர்க்கு ...
..முழி பிதுங்கும் மெய்மறந்து எமக்கு .. ....
மூட்டையில் ஏற்றிய நெல் அவர்க்கு ...பலம் ...
..மூலையில் ஒதுங்கும் பதடு எமக்கு ....புலம் ...
மாடுகளை முத்தமிட்டு மதகில் நீர் ஊட்டி ..
..ஏரிக்கரை பிரண்டைசெடி மாலை பூட்டி ...
..மீந்த வெல்லக்கட்டி மெதுவாய் இடித்த பச்சை நெல் ...
..எட்டி ஒடித்த கரும்பு ..எரவாணத்தில் தொங்கும் மாவிளை...
படர்ந்து தின்று பசியடங்கும் எம் குலத்தில்...
..கருப்பாய் ஒதுங்கி கிடக்கும் போதி முத்துக்கள் நாங்கள் ....
.......ஜனவரி மாதத்தில் முகவரி தரும் புத்தாண்டில் ...
சலங்கை ஒளி வீசி லாடம் இசையில்....
.... ஆடும் மாடுகள் எங்கள் நெருங்கிய உறவு ...
..அவற்றோடு ....
...குப்பைமேனி கீரை சூழ்ந்து கொடிவிட்டு காய்க்கும் ..
...சுரை ..பூசணி ..பரங்கி ..எங்கள் உணவு ...
வேர்விடும் முன் நீர்கேட்டு நிக்கும் பயிர்க்கு...
..எம் மண்வெட்டி காட்டும் திசை ..தம்மவெட்பநிலை ...
சுடுகாட்டு மண்மேடுகள் எல்லை இடும் ..
....விடை கேட்டு நிற்கும் முனி சாமிக்கு ..............
மண்டையில் ஒரு கனவு ...அரக இலை வடிவாய் ...
ஒரு யானை -காது சாமி எலும்பு தெரிய தவமிருக்க ...
...யாரோ ஒரு பூசாரி கத்திக்கொண்டு தாக்கவர...
ஒரு சொல் அவனை தடுத்தது...அது என்ன சொல் ...என்ன சொல் ...
...என்பதற்குள் பச்சை நீரை இவன் மூஞ்சியில் .....
....ஊற்றி கலைத்தது யார் நான்காம் சாமத்து காதையை.........
..
புரிந்து விட்டது இவன் தினம் பசியோடு உறங்கும் ..
..அரச (அரக) மரத்தில் எதோ நம் முன்னோரின் ஆவி இருக்கிறது .என?
..நான் யார் என கேள்வி ....தானாய் வந்தது .......
சாதியில்லாமல் ஆதியில் வந்தகுலம் ...
....சாக்கியபுத்தன் ஆக்கிய குலம் .........
...சாதியை பார்த்து பொங்கலிடும் சாக்கடை மதம் அடக்க ..
..போதியாய் வந்த பூர்வீக குலம் ........
...ஆவிகள் என புரளி பேசி மனிதம் தின்னும் ...
பொய்களை புரட்டிஅடிக்க புரட்சியாய் பூத்த புத்தகுலம்.........
லும்பினி தந்த விதை எங்கள் மன மேடுகளில் ..
...இதய வடிவாய் ஒட்டிக்கொண்ட அரகமர இலையின் கீழ் ..
......அவதரிக்கும் நாங்களும் பிக்குகளே ....
ஓட்டை வண்டியை ஒதுக்கி ஓட்டியும்...
..சாட்டையால் அடித்தான் ஒரு ஒட்டுண்ணி இந்து ..
ஊர்வழி ஏன் வந்தாய் என கேள்வியும் கேட்டான்...
....சேரிகளில் பொங்கல் வேடிக்கை பார்ப்பதே ...
ஊர்களில் பொங்கல் உற்சாகம் கொள்வதே !
..மாடு சொன்னது பதில் என் மகராசன் கருப்பா போ போ!
.............அவன் ஒரு நோயாளி என ?
என்ன நோய் என நான் வினவ ..
..அட அது சாதி நோய் என சத்தமின்றி சொன்னது மாடு !
....சுடுகாடு போகும் வழியில் யார் வைத்தது செடி(அரகசெடி) ...
உண்மையை மறைக்க ஊர்கூடி செய்த வழி ..
...பிணம் ஊரும் தெருவில் சாக்கியமுனியே ...
..கனம் கண்டு கிடக்கும் எம் சினம் திணித்த சிரம் ..
....சீ ...இந்து வாடை ஒரு புறம் ....
...மின்சார கம்பிகள் பட்டு காய்ந்து விழும் இலையில் ..
..உன் சாரம் உள்ளதடா சித்தார்த்தா .....
..இது ராமனின் குஞ்சிகள் போட்ட சதி பட்டை ..(சாதி பட்டை ) ....
..மாட்டு கொம்புகள் வண்ணம் கூட சீலத்தின் சின்னம் ......
தலையாட்டி செல்லும் காளைகள் சொல்லும் ...
...தம்மமே உன் தலைமுறை வெல்லும் .....
அதோ ஆசை துறந்த ஆதியின் பயணத்தில் ...
....வீசும் வந்தனகாற்று ...
...சரணமும் கச்சாமியும் ..எங்கசாமி ...
..சாத் சாத் என அடங்கும் எங்கள் பசி .......
கறி நாள் என சொல்லி வெறி பிடிக்கும் ...
...காசில்லாத பொங்கல் விழா ...அட ...
...ஆசை இல்லா மனிதர் நம் முன்னோர் போட்ட ..
...பாசமடா தம்பி பவுத்தம் .....
எலும்பு வலை தெரியும் ...இனி உண்மை புரியும் ...
......சுவாசம் விட்டு விட்டு சோதனை செய்யும் ....
நடை தளரும் ..சிரம் அதிரும் ..கை மடங்கும் ..கால் துவளும் ...
..குரல் பல் சிறையில் சிக்கி சிதைந்து போகும் ..
..பார்வை தோல் பைகளுக்குள் சமாதியாகும் ....
....சீலா பண்ணா சமாதி ...
...என ஒரு மெய்பாடல் ஊரும் உன் உயிரில் .....
...போகி நாளில் எரித்து விட்டார்கள் உன் வரலாற்றை
பின் பொங்கல் நாளில் உனக்கு பசியே மிஞ்சும் ...
..உன் பசி உணவுக்கானதல்ல ..உண்மைக்கானது ....
..உன் தாகம் நீருக்கானதல்ல ...
...சாதியில் சிக்கிய மக்கள் மீட்கும் தம்மா போருக்கானது ...
அசோகனை நினைத்து வருந்தாதே ....
...அவன் ஆவி உன்னில் புகுந்தால் ...
...ஆயிரம் கலின்கங்கள்...குருதி கோர்த்து தொங்கும் பாரதத்தில் ...
...இந்திய நதிகள் பின் சிகப்பாய் ஓடும் ....
புரியும் ...எனக்கும் ...
....உனைப்போல் தினம் பசிக்கும் ...
.............உன் அடுப்பு இன்று எரியாது போனது ....
...வரலாற்றில் திருடப்பட்ட உன் தீகுச்சியைகேள்...
....எங்கே எரிகிறாய் என ?
ஆசை வெறி கொண்ட சாதி எனை வாரி வந்தது ...
...ஆதி மனிதனே என்னை மன்னித்திடு ....
...நீ எதிர்த்து பேசவில்லை ..
.....அள்ளிதந்தாய்...
...ஒரு மண் பாத்திரம் மட்டும் கொண்டு ..
...நீண்டு கிழிந்து தொங்கும் ஆடையோடு ...
...நீயும் நடந்தாய் ....நீண்ட தூரம் ...
..................அய்யோ ...உனக்கு உணவில்லையா...
,,,என இந்து அடுப்பில் இருந்த விறகு அழுதது .....
....சாத் சாத் ....
நமோ தசோ அரகதோ பகவதோ ...
..நமோ தசோ அரகதோ பகவதோ ...
....புத்தம் சரணம் கச்சாமி ...
தம்மம் சரணம் கச்சாமி ....
...சங்கம் சரணம் கச்சாமி
...சீலா பண்ணா சமாதி ...
...என வெளிவராது ஒரு குரல் இவனை ஆட்கொள்ள ...
...............வேறு வடிவாய் கேட்டது வெளியில் ...
......நீட்டினான் பாத்திரத்தை நிலை மயங்கி ......
ஒரு குத்து சோறு ....உண்டு ...
...........பொழுது முடிய ....இருட்டு பரவியது ...
.....பசியோடு மீண்டும் ..அரக நிழலில் ...
....வீரிட்டு தெறித்த இவன் ஒளியால் மின் கம்பிகள் கண் சிமிட்டின ...
...................விபசன்னா வடிவில் உடல் படிய .........
................சாத் சாத் ....என அடங்கிட .........
ஊர் கூடி நின்றது ...
....சேரியில் ஒருவன் பரிநிர்வாணம்...
.....................சாதி மறந்து சொன்னது மக்கள் ....
..சாத் சாத் ...
....புத்தம் .........தம்மம்...............சங்கம் .......என
....இது .....
.......சாதி எதிர்த்த சாக்கிய பொங்கல் ...
.........மதவெறி அடக்கி மனிதம் ஆக்கிய பொங்கல் .............
...... வீரமணி